Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவை ஹாலிவுட் தளத்திற்கு அழைத்துச் செல்லும் பிரபல இயக்குனர்.. வெளிவந்த மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவருடைய நடிப்பு மென்மையான குணமும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
அந்தவகையில் தற்போது சூர்யா புது விதமான கதாபாத்திரத்தில் தோன்றயிருக்கிறார். தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். திரைப்படத்தின் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் கதை அறிக்கைகள் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த படத்திற்கு இரும்புக்கை மாயாவி என்ற பெயரிடப்படும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் முதன்முதலாக பத்து பிரபல இயக்குனர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட ரைன் ஆண்பிலிம் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் மணிரத்னம், ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மிஸ்கின், லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ் ,பாலாஜி சக்திவேல், சசி ,லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரால் உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனமாகும்.

suriya-lokesh-cinemapettai
இந்த நிறுவனம் மூலமாக சூர்யாவின் புது அவதாரம் திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் கதைக்கரு 1961 இல் வெளிவந்த டிசி என்ற காமிக் நாவலான தி ஸ்டீல் கிலோவை என்பதை அடிப்படையாகக் கொண்டது.
இதில் சூர்யா சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார் இக்கதையில் சூப்பர் ஹீரோவின் கை வெட்டப்பட்டு பின்பு இரும்பு கை பொருத்தப்படுகிறது என்பதைப் போலவும் ,ஒரு ஆய்வு கூடத்தில் ஏற்படும் விபத்தின் காரணமாக கண் தெரியாமல் இருப்பது போலவும் அமைந்ததே கதையின் மூலக் கருவாகும்.
