singam surya lawrence clash

இரண்டு பெரிய நட்சத்திரம் வெளி உலகத்துக்கு ஆயிரம் நல்லது பண்ணாலும் ரியல் ஹீரோனு பெயர் எடுத்தாலும். தொழில்னு வந்துட்டா இவருக்கு அவர் வில்லன் அவருக்கு இவர் வில்லன் என்றுதான் இருக்கிறார்கள். நமக்குதான் என்ன பிரச்சனை நடக்குதுனே புரியல. சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த வாரம் சூர்யாவின் சிங்கம் 3 படமும் டான்ஸ் மாஸ்டரின் சிவலிங்கா படமும் நேரடியாக மோதுவதாக இருந்தது. சிங்கம் படம் பின்வாங்கவே டான்ஸ் மாஸ்டர் படமும் பின்வாங்கியிருக்கிறது.

சூர்யாவை எதிரியாகப் பார்க்கிறார் ராகவா லாரன்ஸ் என்கிறார்கள். ‘நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்’ என்று தன் படத்திலேயே பன்ஞ்சால் சூர்யாவை தாக்கினார் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ். இப்போது சிங்கம் 3 படத்தோடுதான் தன் படத்தை ரிலீஸ் செய்வேன் என்றும் அடம் பிடிக்கிறாராம்.

ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன தகராறா இருக்கும்? இதுதான் இப்போதைய கோலிவுட் ஹாட் டாக்.