முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தன் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ’36 வயதினிலே’ மற்றும் ‘பசங்க 2′ ஆகிய படங்களை தொடர்ந்து ’24’ என்ற படத்தை மிகுந்த பொருட் செலவில் தயாரித்தார்.

இப்படமும் சூர்யாவுக்கு நல்ல லாபத்தை பெற்று தரவே, தற்போது தன் தம்பி கார்த்தி நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கிறாராம். இதற்காக பல முன்னணி இயக்குநர்களிடம் சூர்யா கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘காஷ்மோரா’ மற்றும் மணிரத்னம் படங்களை முடித்துவிட்டு, தன் அண்ணன் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.