பெயர் முடிவு செய்யப்படாத இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, கதாநாயகன் கார்த்தி.

2டி என்டர்டெயின்மென்ட்

சூர்யா தன் குழைந்தைகள் தேவ் மற்றும் தியாவின் பெயர்கொண்டு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மென்ட். இதுவரை இந்நிறுவனம் நான்கு படங்கள் தயாரித்துள்ளது . இரண்டு படங்களில் ஜோதிகா ஹீரோயின் மற்ற படங்களில் சூர்யா ஹீரோ.{24, 36 வயதினிலே, பசங்க-2, மகளிர் மட்டும்}

இந்நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பாக உருவாகப் போகும் படத்தில் கார்த்தி தான் ஹீரோ பாண்டியராஜ் தான் இயக்குனர் என்ற அறிவிப்பு முன்னரே வந்தது.

2 D press release
இயக்குனர் பாண்டியராஜ்

‘பசங்க-2’ படத்தை இயக்கிய பாண்டியராஜ் இயக்கத்தில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ‘வனமகன்’ படப்புகழ் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பை சிவகுமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சென்னையில் ஐந்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறுகிறது . பின்னர் தென்காசியில் 40 நாட்கள் படப்பிடிப்பு தொடருமாம்.

Movie Pooja
Suriya, Sivakumar, Karthi, Pandiaraj

இந்த துவக்க விழாவில் பாண்டிராஜ், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர் ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்,  இசை அமைப்பாளர் டி.இமான், ‘2டி’ இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

நவம்பர் 17 கார்த்தி நடிப்பில் போலீஸ் படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ரிலீஸ் ஆகிறது. இந்நேரத்தில் இவர் அடுத்த ப்ரொஜெக்ட்டாக மெகா நட்சத்திர கூட்டணியில் கிராமத்து பின்னணியில் கதைக்களத்தை தேர்வு செய்துவிட்டார். அப்பா துவக்கி வைக்க, அண்ணன் தயாரிக்க இப்படத்திற்கு கார்த்திக்கு சம்பளம் தருவாங்களா ???