ராஜமௌலி படத்தில் இணையவிருக்கும் சூர்யா, கார்த்திக்.. ட்ரெண்டாகும் போஸ்டர்!

இந்திய திரையுலகிலேயே பிரம்மாண்டமான இயக்குனர் என்ற கௌரவத்துடன் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் எஸ்.எஸ் ராஜமௌலி. இவர் பாகுபலி படத்தின் மூலம் சினிமா துறையில் நடத்திய சாதனையை உலகமே வியந்து பார்த்தது.

இந்த நிலையில் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படமான ஆர். ஆர். ஆர் படத்தின் போஸ்டரை சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து ரீ- கிரியேட் செய்து வைரலாக்கி வருகிறார் சூர்யாவின் ரசிகர்.

அதாவது பிரபலமான இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர்- ஐயும் ராம்சரணையும் வைத்து மிக பிரமாண்டமாய் எடுத்துக் கொண்டிருக்கும் படம்தான் ஆர். ஆர். ஆர்.

இந்தப் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இவ்வாறிருக்க இந்தப்படத்தின் போஸ்டரை தமிழ் நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து ரீ- கிரியேட் செய்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

அதாவது  சூர்யாவை ராமராஜன் கதாபாத்திரத்திலும், கார்த்தியை பீம் ரோலிலும் வைத்து போஸ்டர்களை ரெடி பண்ணி வெளியிட்டுள்ளார் சூர்யாவின் ரசிகர்.

மேலும் இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ராஜமௌலி நிறைவேற்றவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

karthik-RRR
karthik-RRR
suriya-RRR
suriya-RRR