fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரே ஒரு பாட்டை கேட்டதற்கு மெய்சிலிர்த்த சூர்யா.! உச்சகட்ட மகிழ்ச்சியில் இசையமைப்பாளர்

suriya kappan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே ஒரு பாட்டை கேட்டதற்கு மெய்சிலிர்த்த சூர்யா.! உச்சகட்ட மகிழ்ச்சியில் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து முடித்துள்ளார், கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் ரசிகர்களும்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை அனைவரிடமும் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் சூர்யா படத்திற்கு தற்போது ஜீ.வி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். அந்தப் பாடலைக் கேட்ட சூர்யா மெய்சிலிர்த்து போக ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை புகைப்படம் எடுத்து ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் அனைவரும்  சமூக வலைதளங்களில் ஷேர் செய்து  வருகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top