செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

மாஸ் காட்டும் கங்குவா.. இப்போவே இத்தனை கோடியா.. சூர்யா வாழ்க்கையில் தெரியும் ஒளி

கங்குவா நாளை திரைக்கு வர இருப்பதால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புடன் இருக்கிறார்கள். தற்போது திரையரங்கில் அமரன் படம் தாறு மாறாக ஓடி ரசிகர்களை கவர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் அமரன் படம் திரையிடப்பட்டு வருகிறது. தற்போது, கங்குவா படம் வெளியாக, அமரன் படத்திற்கு திரைகள் குறைய நிறைய வாய்ப்புள்ளது.

10,000 திரைகளில் வெளியாக போகும் கங்குவா படம் சூர்யா கேரியரில் ஒரு முக்கிய படமாக உள்ளது. ஏன் என்றால், இது தான் அவர் வாழ்நாளில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது. அப்படி இருக்க பாய்ந்து பாய்ந்து ப்ரோமோஷன் செய்துகொண்டிருக்கிறார் சூர்யா. இந்த நிலையில், செய்த ப்ரோமோஷன் வீண் போகவில்லை என்பதற்கு ஏற்ப, படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது..

இப்போவே இத்தனை கோடியா?

‘கங்குவா’ படம், புக்கிங் ரிலீஸ் பண்ண சில மணிநேரத்திலேயே 2,33,826 டிக்கெட்டுகளை விற்று அதிரடி காட்டியது. பாண் இந்திய அளவில் ப்ரோமோஷன் செய்ய, இங்கு உள்ள ரசிகர்களை விட, வடக்கு ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மேலும் இது சூர்யாவுக்கு பாலிவுட் career-க்கான ஒரு அடிக்கலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இப்படம் அதிகபட்ச டிக்கெட்டுகளை விற்றுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட 8 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாகிறது. தற்போது, overseas-ழும் கங்குவா படத்துக்கு நல்ல review வந்த வண்ணமாக உள்ளது.

இந்த நிலையில் ப்ரீ-புக்கிங்கில் மட்டுமே கங்குவா படம், 4.3 கோடியை வசூல் செய்துள்ளது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால் சூர்யா கேரியறில் ப்ரீ-புக்கிங்-ல் இத்தனை கோடி வசூல் என்றால் அது இதுவே முதல் முறை.

- Advertisement -

Trending News