Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-jothika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணையும் சூர்யா-ஜோதிகா.. எதிர்பார்ப்பை எகிறவிடும் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ்த் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக மின்னி கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா- ஜோதிகா. இவர்களது ஜோடியை பிடிக்காதவர் தமிழகத்தில் எவருமிலர்.

மேலும் திருமணத்திற்கு முன்பு இருவரும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’, ‘ஜில்லுனு ஒரு காதல்’ ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர். திருமணத்திற்கு பிறகு இதுவரை இருவரும் இணைந்து எந்த படமும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி அவர்களது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

அதாவது திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா தன்னுடைய மகனும் மகளும் வளர்ந்து விட்ட காரணத்தால் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. மேலும் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறிருக்க சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜோதிகாவுடன் அவர் இணைந்து படத்தில் நடிப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அந்தவகையில் மலையாள திரைப்பட தயாரிப்பாளரான அஞ்சலி மேனனின் தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

மேலும் இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருவதோடு சூர்யா- ஜோதிகாவின் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. இந்த ஸ்டார் ஜோடிகளை திரையில் மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top