‘காயங்குளம் கொச்சுண்ணி’ .  இது நிவின் பாலி நடித்துக்கொண்டிருக்கும் மலையாளப்படம். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும்  படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என்கிறார்கள். காயங்குளத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படம். ஹைவெயில் செல்பவர்களிடன் கொள்ளை அடிக்கும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. ராபின் ஹூட் பட ஸ்டைலில் இருக்குமாம். பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம்.

kayamkulam kochunni

இப்படத்தையை இயக்குபவர் ரோஷன் ஆண்ட்ருஸ். இவர் தான் ஜோதிகாவின் கம் பேக் படமான 36 வயதினிலே படத்தை சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் பாணரில் இயக்கியவர்.

காயங்குளம் கொச்சுண்ணி  படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதமாக மங்களூருவில் உள்ள மாஜேஸ்வர் என்ற இடத்தில் நடந்து வருகிறது. அந்த ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு இந்த இருவரும் நட்பின் அடையாளமாக சென்று வந்துள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.

இந்த ட்ரெண்டிங் ஜோடியை பார்த்ததும் குஷி ஆன ரசிகர்கள் மற்றும் படக்குழு இவர்களுக்காக ஸ்பெஷல் மெகா சைஸ் சாக்லேட் கேக் ஆர்டர் செய்து அசத்தியுள்ளார்.

பின்னர் படத்தின் இயக்குனர் ஸ்கெட்ச் வடிவில் நிவின் பாலியின்  லுக் படத்தில் இவ்வாறு தான் இருக்கும் என்று காமித்தாராம்.

சினிமாபேட்டை கிசு கிசு

படத்தின் ரிமேக் உரிமைக்காகவா?, அல்லது 2 டி பாணரில் நிவின் பாலி நடிக்கப்போகிறாரா?, அல்லது இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரயூஸ் மீண்டும் தமிழ் சினிமா பக்க வரப்போகுகிறாரா? இல்லை வெறும் நட்பின் விசிட் தானா இது என்று விரைவில் தெரிந்துவிடும். வி ஆர் வைட்டிங்.