சூர்யா,ஜோதிகா மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! மகிழ்ச்சியில் மூழ்கிய சூர்யா ஜோதிகா.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

சூர்யா,ஜோதிகா மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! மகிழ்ச்சியில் மூழ்கிய சூர்யா ஜோதிகா.!

News | செய்திகள்

சூர்யா,ஜோதிகா மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! மகிழ்ச்சியில் மூழ்கிய சூர்யா ஜோதிகா.!

எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா அவர்கள்.

இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார்.

Surya

Surya

மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, நான்கு முறை ‘விஜய் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரே படத்திலேயே மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து சாதனைப் படைத்துள்ளார்.

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்த போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததால், பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்தனர்.

jothika

கடைசியில் அவர்கள் பச்சைக்கொடிக் காட்ட, அவர்கள் இருவரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் இருவருக்கும் 2007ல் தியா என்ற மகளும், 2010ல் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

தமிழ் சினிமாவில் பலருக்கும் பிடித்த நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவருமே எங்கேயும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. தற்போதும் இளம் காதல் ஜோடிகள்போல் தான் நடந்து கொள்வார்கள்.

surya

இந்நிலையில், இவர்களின் மகள் தியா இந்தியன் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் கையால் ஒரு கோல்டன் கிரிக்கெட் பேட் வாங்கியுள்ளார்

ஜுனியர் Women Inspiration என்ற வகையில் இந்த விருது தியாவுக்கு கிடைத்துள்ளது.

surya

தியா தன்னுடைய திறமைகளால் பல துறையில் நிரூபித்திருக்கிறாராம். அதன் காரணமாகவே இவருக்கு இப்படி ஒரு விருது கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் முழு குடும்பமும் உள்ளார்களாம்.

ஆனால் ஒருசிலரோ அவர் பிரபலத்தின் மகள் என்பதால் மட்டுமே இவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இவ்வாறான வதந்திகள் ஒரு புறம் கிடந்தாலும் அவற்றை புறம் தள்ளி தியாவுக்கு எமது வாழ்த்துகளை தெரிவிப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top