Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆர்யா மற்றும் நண்பர்களின் பிட்னெஸ்ஸை மனதார பாராட்டிய சூர்யா. 12000 லைக்ஸ் கடந்து வைரலாகுது போட்டோஸ்.

காப்பான்

சூர்யாவின் 37 வைத்து படம். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் கே.வி.ஆனந்த் அவர்களுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் சாயிஷா, ஆர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

suriya 37 kaappaan

ஆர்யா

சூர்யா ஒரு புறம் பிட் ஆசாமி என்றால், ஆர்யாவும் எந்தளவுக்கு சளைச்சவர் இல்லை. அதிக படங்களிலும் (எந்த பெண்ணுக்கும்) கமிட் ஆவதில்லை ஆர்யா. முரட்டு தனமாக ஜிம்மில் ஒர்க் அவுட், நண்பர்களுடன் சைக்ளிங் என்று இருப்பவர். ட்விட்டரில் இது சம்பந்தமாக நிறைய போட்டோஸ், வீடியோஸ் அப்லோட் செய்துள்ளார் ஆர்யா.

PBP2019

நன்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும். இந்தாண்டு ஆகஸ்ட் 18 – 22 நடைபெறுகிறது. 1200 கிலோ மீட்டர் தூரம். இதில் தான் ஆர்யா கலந்துகொள்ளப்போகிறார். அதற்குத்தான் இவ்வளவு உழைப்பும்.

Cycling

இந்நிலையில் சூர்யா, ஆர்யா மற்றும் நண்பர்களுடன் இணைந்து சைக்ளிங்க் செய்துள்ளார். எங்களை ஊக்குவித்ததுக்கு நன்றி, நீங்க சூப்பர் என்றும் பதிவிட்டார்.

மேலும் சுமார் மூன்று மணிநேரத்தில் இவர்கள் 63 km கடந்த தகவலையும் பகிர்ந்தார் ஆர்யா.

cycling

சூர்யா தன ட்விட்டரில், “நன்றிகள் ஆர்யா மற்றும் டீம். புத்துணர்ச்சியாக இருந்தது. உன் ரேஸுக்கு ஆல் தி பெஸ்ட். நீங்கள் அனைவரும் சூப்பர் பிட் ஆசாமிகள். இது போல் இன்னமும் நிறைய ரெய்டு போக விரும்பிகிறேன்.” என்று பதிலுக்கு பதிவிட்டார்.

சினிமாபேட்டை குசும்பு

ஆல் தி பெஸ்ட் ஆர்யா ப்ரோ . இந்த வருஷம் கப்பும் உங்களது, கல்யாணமும் உங்களது. எங்களுக்கு பிரியாணி போடுறீங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top