Connect with us
Cinemapettai

Cinemapettai

surya jagan mohan reddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சூர்யா? அவரே கூறிய தகவல்

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் என்.ஜி.கே இத்திரைப்படம் அரசியல் களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வெளியிட்டார். மேலும் இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டனர்.

தற்போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றில் சூர்யா நடிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் பற்றி சூர்யாவிடம் கேட்டதற்கு “ஆந்திர முதல்வராக தற்போது பதவி ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான ஓ.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை. ஆனால் அவர் படத்தில் நடிப்பதற்கு கேட்டால் கண்டிப்பாக கதை பிடித்தால் நடிப்பேன் என்று கூறினார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது என்றும், அவர் வெற்றி பெற்று தற்போது முதல்வராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி என சூர்யா தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top