Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-E

Videos | வீடியோக்கள்

கிராமத்து கெட்டப்பில் புரட்டி எடுக்கும் சூர்யா.. அனல் பறக்கும் எதற்கும் துணிந்தவன் டீஸர்

ஜெய்பீம் பட வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. இப்போது கோலிவுட், பாலிவுட் என அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய படங்களில் சூர்யாவின் படமும், இடம் பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதன் ஹிந்தி ரீமேக்கை ஏற்கனவே போட்டி போட்டு வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள்.

கிராமத்து கதாபாத்திரத்தில் எதிரிகளை புரட்டி எடுக்கும் சூர்யாவாக மாஸ் காட்டியுள்ளார். அவருக்கு வில்லனாக டாக்டர் படத்தில் நடித்த வினய் நடித்துள்ளார். பெண்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பது போல் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக சமூக பிரச்சனையை கண்டிப்பாக சூர்யா கையில் எடுத்து இருப்பார். ஜெய்பீம் படத்திற்குப் பின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளிவந்துள்ள இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Continue Reading
To Top