காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனாராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் செல்வராகவன். அடுத்தடுத்து இவர் எடுத்த படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் யாரும் பார்க்காத கோணத்தில் அமைந்த கதையையும் திரைக்கதையையும் கொண்டிருந்தன.

தொடர் வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருந்த அவர் தனது வாழ்வின் லட்சியப்படம் என்று சொல்லிக்கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தமிழக ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டு தோல்வி அடைந்தது.

Aayirathil Oruvan2-Pudhupettai2அதனை தொடர்ந்து மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் இப்படி வரிசையாக தொடர் தோல்விகள். தற்போது S.J.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இதன் பிறகு நம் சூர்யா (ஜோதிகா வீட்டுக்காரர்)வை வைத்து சூர்யா 36 என்னும் படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படம் தனது கனவுப்படம் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார். இன்னும் சூர்யா தரப்பிருந்து எந்த தகவலும் இல்லை. தனது ட்விட்டர் பக்கத்தில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்புள்ளதாக செல்வராகவன் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கனவுப்படம் கனவுப்படம்னு நீங்க எடுத்த படத்தை பார்த்து எங்களுக்கு தூக்கமே போச்சு… திரும்பவும் இன்னொரு கனவுப்படமா!!!