சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தற்போது சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் தன் அகரம் நிறுவனத்தின் கீழ் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை இவரே ஏற்று வருகிறார்.

சமீபத்தில் சென்னை தீவுக்கடலில் இரவு நேர மராத்தான் போட்டி நடந்தது, இவை ஏழை குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்தனர்.

இந்த மராத்தான் போட்டியில் சூர்யா கலந்துக்கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் வரை ஓடினார்.