தானா சேர்ந்த கூட்டம்

ஸ்பெஷல் 26 என்ற பிரபல பாலிவுட் படத்தின் தழுவல். இப்படத்தை விக்னேஷ் சிவன் தன் பாணியில் காமெடி கலந்து எடுத்திருந்தார். படித்த பட்டதாரி வாலிபர்கள், லஞ்சம் கொடுக்க இயலாமல் வேலை இன்றி தவிக்கின்றனர். ராபின் ஹூட் ஸ்டைலில் அதிரடி வழியில் நூதன முறையில் திருடும் சூர்யா & டீம். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

thaana serntha kottam

கீர்த்தி சுரேஷ், செந்தில், ‘நவரச நாயகன்’ கார்த்திக், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், மீரா மிதுன், கலையரசன், நந்தா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

பொங்கல் தினத்தன்று ரிலீசான இப்படம் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நல்ல வசூலும் செய்தது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா சிறப்பு பரிசாக சிகப்பு கலரில் டொயோட்டா கார் அளித்துள்ளார்.

Surya Vignesh Sivan

இதனை இயக்குனர் தன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

Vignesh Sivan

மேலும் ” யார் என்ன சொன்னாலும் நாங்க அன்பாகவே இருப்போம். உங்களின் விலைமதிப்பில்லா அன்புக்கும், செய்கைக்கு என் நன்றிகள். என்னை போன்ற புத்தவராவை ஊக்குவிக்க பெரிய மனம் வேண்டும். உங்களின் அன்புக்கு நான் ஏற்றவனா என்று எனக்கு தெரியவில்லை. இத்தகைய வாய்ப்புக்கும், இந்த நிகழ்வுக்கும் என் நன்றிகள்.” என்று டீவீட்டியுள்ளார்.

இந்த நிகழ்வின் பொழுது 2 டி என்டேர்டைன்மெண்ட் ராஜசேகரும் உடன் இருந்தார்.