Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவை காட்டாமல் பெப்பே தந்த நிர்வாகம். கடுப்பில் ரசிகர்கள்

நடிகர் சூர்யாவை இலவசமாக பார்க்கலாம் என அறிவித்த லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் திடீரென ஜெர்க் அடித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தாலும், சொல்லும்படியான வெற்றியை பெற்று தரவில்லை. அந்த வேளையில், பாலா இயக்கிய நந்தா படத்தில் நடித்தார். அதுவரை சாக்லேட் பாயாக பார்த்த சூர்யாவை அதிரடியான ரவுடியாக பார்த்த போது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைசாக இருந்தது.அப்படம் பெற்று தந்த வெற்றியால் கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வெற்றி கண்டார்.
தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் மூலம் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தை இந்த வருட தீபாவளியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் 32வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். சாயிஷா சைகல் இப்படத்தின் நாயகியாகி இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. லண்டனில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் ஜூலை 1 மற்றும் 2ம் தேதிகளில் லண்டனில் உள்ள ஜிப்சன் ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சூர்யா மற்றும் படக்குழுவினரை நேரில் பார்க்கலாம் என ஒரு அறிவிப்பை லைகா சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த செய்தி தவறுதலானது என லைகாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரமான தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
