தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார் படத்தை ட்ரீம் வாரியார் பிச்சர் நிறுவனம் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர் பிரபு இணைந்து தயாரித்து வருகிறார்.

ngk

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் பரீத் சிங் நடித்து வருகிறார் மேலும் படத்தில் இரடு ஹீரோயின் மற்றொரு ஹீரோயின் சய்பல்லவி NGK படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், சமீபத்தில் வெளியாகிய படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

படத்தின் படபிடிப்பு மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருந்தார்கள் இந்த நிலையில் படக்குழு தனது டிவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் அதில் படத்தின் ஷூட்டிங் ப்ளான் பண்ணியதை விட சற்று தாமதமாக செல்வதால் படத்தை திட்டமிட்ட படி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாதா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.