fbpx
Connect with us

Cinemapettai

சூர்யா ரசிகர்களுக்கு வருகிற 26-ஆம் தேதி ஒரு ரிலிஸ்.!

News | செய்திகள்

சூர்யா ரசிகர்களுக்கு வருகிற 26-ஆம் தேதி ஒரு ரிலிஸ்.!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.  சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

surya thana sernthu kootam

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் இருந்து `நானா தான வீணா போனேன்’ என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

படங்களுக்கு டீசர் விடுகிற ட்ரெண்ட் எல்லாம் மலையேறி இப்போது பாட்டுக்கே டீசர் விடும் ட்ரெண்ட் வந்துவிட்டது.

இதை இந்தப்படக்குழுவும் விட்டதாக இல்லை.அனிருத், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

thaana serntha koottam

thaana-serntha-koottam suriya

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் வெளியாகியது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை, ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.

முன்னதாக தீபாவளியை முன்னிட்டு `சொடக்கு’ பாடலின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், முழு பாடலும் தற்போது வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

surya

இந்தநிலையில், இந்தப்பாடல் அக்டோபர் 26ல் வெளியிடப்படுகிறது என அனிருத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றது.

படத்தின் டீசர் நவம்பரிலும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரிலும் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாக இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top