வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஆப்பு வச்சது சிவகார்த்திகேயன் இல்ல நயன்தாரா.. சூர்யாவுக்கு நேரம் சரியில்ல போல!

Nayanthara: நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷுக்கு இடையேயான பஞ்சாயத்து சமூக வலைத்தளத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தனுஷ் 3 செகண்ட் வீடியோவுக்காக 10 கோடி பணம் கேட்டிருக்கிறார் என்ற அறிக்கையை மட்டும் வெளியிட்டிருக்கலாம்.

அதை தாண்டி தனுஷ் கேரக்டர் இப்படி, முகமூடி போட்டுக் கொள்கிறார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பஞ்ச் டயலாக் பேசி மறைத்து விடுவார் என ஏகத்துக்கும் வசைப்பாடிவிட்டார் நயன்தாரா. அத்தோடு சேர்த்து விக்னேஷ் சிவன், வாழு வாழ விடு என அவர் ஒரு பக்கம் போஸ்ட் போட்டு இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் எந்த வீடியோவுக்காக 10 கோடி அபராதம் கேட்கப்பட்டதோ அதே வீடியோவை இலவசமாக பார்த்துக் கொள்ளுங்கள் என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்து விட்டார். இதில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது சூர்யா என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

ஆப்பு வச்சது சிவகார்த்திகேயன் இல்ல நயன்தாரா

பல பிரச்சனைகளுக்கு இடையே கடந்த 14ஆம் தேதி சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸ் ஆனது. நேற்றைய தினம் முழுக்க படத்தின் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் இருந்தது. இதை தொடர்ந்து படத்தில் பின்னணி இசை அதிகமாக இருக்கிறது என நிறைய குற்றச்சாட்டு எழுந்ததால் ஒலி அளவை குறைக்க தியேட்டர் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.

இதை தொடர்ந்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கங்குவா படத்தின் விமர்சனங்களை விடலாம் என திட்டமிட்டு இருப்பார்கள். எப்படியும் படத்தை பற்றி தொடர்ந்து செய்தி வெளியாகி கொண்டிருந்தாள் லீவு நாளில் அந்த படத்தை பார்க்கலாம் என மக்கள் நினைப்பார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தனுஷ் செய்தது சரியா, நயன்தாரா செய்தது சரியா என புது பிரச்சனை வந்துவிட்டது. சிவகார்த்திகேயன் அவருடைய மனைவியின் பிறந்தநாளுக்கு வீடியோ போட்டதற்கு அவர் திசை திருப்பி இருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. இப்போ நயன்தாரா செய்தது எந்த லிஸ்டில் சேரும் என தெரியவில்லை.

Nayanthara
Nayanthara
- Advertisement -

Trending News