அஜித், விஜய்யை விட அதிகம் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யாதான். கமர்ஷியல், லோக்கல், ஸ்டைலிஷ், வில்லன் என்று கலந்துகட்டி கமல்ஹாசனுக்கு அடுத்து வெரைட்டி தருகிறார். ஆனால் அஜித், விஜய் என்ற லிஸ்டுக்குள் இன்னும் வரமுடியவில்லை. அஜித், விஜய் அளவுக்கு ஓப்பனிங் இருப்பதில்லை.

சூர்யா அதற்கான காரணத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார். அவர்கள் அளவுக்கு நமக்கான ரசிகர்கள் இல்லை. முக்கியமாக ரசிகர் மன்றங்கள் சரியாக செயல்படவில்லை. எனவே அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகர்களைக் கூட்டம் கூட்டி சொல விஷயங்கள் பேசியிருக்கிறார். அன்று மட்டும் சுமார் பத்தாயிரம் பேர் திரண்டதாக சொல்கிறார்கள். அடுத்த கட்டமாக படம் ரிலீஸுக்கு முன்பு ஒரு கூட்டம் நடத்த திட்டமிடுகிறாராம். ஆனால் இது ஆளுங்கட்சியை டென்ஷனாக்குமோ என்று ரகசியமாக செய்து வருகிறார் என்கிறார்கள்.

எது எப்படியோ சினிமாவோடு மட்டும் நல்லது செய்தால் நல்லது. நாளை அரசியல்னு ஒட்டு கேட்காம இருந்தா சரி .