fbpx
Connect with us

மெர்சல் பண்ணிய விஜய் சாதனை! அசால்டாக முறியடிச்சிட்டு போன சூர்யா..

vijay-surya

News / செய்திகள்

மெர்சல் பண்ணிய விஜய் சாதனை! அசால்டாக முறியடிச்சிட்டு போன சூர்யா..

பொதுவாக சாதனை என்பதே அதை யாராவது முறியடிக்கத்தான் ஆனால் வர வர அந்த சாதனைக்கு மரியாதையே இல்லாம கொஞ்ச நேரத்திலேயே அந்த சாதனைலாம் முறியடிச்சிட்டு போறதுக்கு வழக்கமா ஆயிடுச்சி. அப்படி நடந்தது நம்ம தளபதி படத்துக்கே அதுவும் சூர்யா அசால்ட் பண்ணுவார்னு யாரும் நினைச்சி கூட பார்க்க மாட்டாங்க.

ஒரு சாதனை உருவான அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. ‘மெர்சல்’ படத்தின் முதல் பார்வை டுவிட்டரில் அதிகமாக ரிடுவீட் செய்யப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. 50 ஆயிரம் முறை அது ரிடுவீட் செய்யப்பட்டிருந்தது.

அந்த சாதனையை அடுத்த சில மணி நேரங்களில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் பார்வை முறியடித்துவிட்டது. இந்தப் படத்தை 53 ஆயிரம் பேர் ரிடுவீட் செய்துள்ளனர். அதுவும் இரண்டு நாட்களிலேயே இது நிகழ்ந்ததும் புதிய சாதனைதான்.

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் தான் அதிகம் செயல்படுகிறார்கள் என்பது இருந்தது. இப்போது சூர்யாவின் ரசிகர்களும் அந்த போட்டியில் சேர்ந்துள்ளார்கள். அடுத்த சில வாரங்களுக்கு இவர்களுக்குள் பலத்த போட்டியை எதிர்பார்க்கலாம்.

vijay as cm‘விவேகம்’ டிரைலர், ‘மெர்சல்’ டீசர், ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர் என அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இதில் எந்தெந்த படங்கள் சாதனை படைக்கப்போகிறது என்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனாலும், இவர்களின் சண்டையை ஓவியாவின் ரசிகர்கள் மிஞ்சி விடுவார்கள் என்பது நிஜம்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top