வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நயன்தாரா நோ சொல்ல, சூர்யாவை இழுத்த இயக்குனர்.. ஆண் தெய்வமாக காட்சியளிக்க போகும், ரோமியோ

சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார். என்னதான் கடந்த இரண்டு வருடங்களாக அவரின் படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் தற்போது அடுத்தடுத்து சூர்யாவின் படங்கள் ரிலீஸாகவுள்ளது. அந்த வகையில் முதலாவதாக சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான கங்குவா திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் சூர்யா பிசியாக இருக்கின்றார். இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என அழைக்கப்படும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் இந்த படம், ஒரு காதல் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதில் ரோமியோவாக கலக்க போகிறார் நடிகர் சூர்யா.

நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா ஒரு காதல் கதையில் நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு ஒரு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

சாமியாக நடிக்கும் சூர்யா

சூர்யா ஆர்.ஜெ பாலாஜியின் இயக்கத்தில் தன் 45 ஆவது திரைப்படத்தில் நடிப்பதாக முடிவெடுத்துள்ளார். முற்றிலும் எதிர்பாராத வித்யாசமான கூட்டணியில் சூர்யா 45 அமைவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் கதை பற்றி ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது

சில நாட்களுக்கு முன்பு, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி எடுக்கப்போவதாக முடிவானது. இந்த நிலையில், இதற்கு போட்டியாக மாசாணி அம்மன் படத்தை ஆர்.ஜே பாலாஜி எடுக்கப்போவதாக கூறினார், ஆனால் சரியான கதாநாயகி அவருக்கு கிட்டவில்லை.

இந்த நிலையில், ஸ்கிரிப்ட்டில் ஒரு சில changes செய்து, தளபதி விஜயிடம் இந்த கதையை கூறியுள்ளார். அவருக்கு கதை பிடித்திருந்தாலும், தற்போதுள்ள சூழ்நிலையில் அவரால் நடிக்க முடியாது. அதனால் இத தொடர்ந்து நடிகர் சூர்யாவிடம் கூறியுள்ளார். அவருக்கு கதை மிகவும் பிடிக்க உடனே ஓகே சொல்லிட்டார்.

இந்த படத்தில் சூர்யா ஒரு ஆண் தெய்வமாக நடிக்கவுள்ளார். எப்படி பட்ட கதையாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு இப்போதே ஆர்வம் அதிகரித்துள்ளது.

- Advertisement -

Trending News