ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முன்னணி நிறுவனத்துடன் கூட்டணி போடும் சூர்யா.. ஒரே வரியில் மடக்கிய சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணி படம் உருவாக பல வருடமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் சூர்யா தனது அடுத்தடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா 5 நிமிடம் நடித்திருந்தார்.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் சூர்யா நடிக்கயுள்ளார். இந்நிலையில் சூர்யா 42 படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான யூவி க்ரியேஷன் தயாரிக்கவுள்ளது. சிறுத்தை சிவா அஜித்துக்கு விசுவாசம் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து இருந்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று இருந்தது. தற்போது சூர்யாவிடம் சிறுத்தை சிவா தனது படத்தின் கதையை ஒன்லைன் ஸ்டோரியாக சொல்லியுள்ளார். அதாவது விஸ்வாசம், அண்ணாத்த படங்களைப்போன்று குடும்ப ஆடியன்சை கவரும் விதமாக ஒரு வரியில் சூர்யாவுக்கு சிறுத்தை சிவா கதை கூறியுள்ளார்.

சூர்யா இதுவரை நடித்திராத வகையில் புதுவிதமான கேரக்டரில் இப்படத்தில் நடிக்கயுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளதாம். தற்போது டாப் ஹீரோக்கள் இதுபோன்ற தமிழ், தெலுங்கு என இரு மொழி உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்கள்.

தளபதி விஜய்யின் வம்சி மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து தற்போது சூர்யாவும் இரு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கயுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

- Advertisement -

Trending News