ஜெய்பீமில் நடித்த 6 பிரபலகளின் சம்பளம்.. ரீ-என்ட்ரி கொடுத்து கோடியில் வாங்கிய பிரகாஷ்ராஜ்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். பழங்குடியினர் வாழ்க்கை முறையைப் பற்றியும், அவர்களுக்கு நடந்த அநீதியைப் பற்றி உண்மை சம்பவமாக எடுக்கப்பட்ட கதை ஜெய் பீம். இப்படம் வெளியாகி மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஜெய்பீம் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அவர்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். இவர்களது நடிப்பால் ரசிகர்களுக்கு இன்னும் ஜெய்பீம் படத்தின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. ஜெய்பீம் படத்திற்காக இவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.

ஜெய்பீம் படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்தது. இப்படத்திற்காக சூர்யா 22 முதல் 25 கோடி வரை செலவு செய்துள்ளார். ஜெய்பீம் படத்தில் உண்மையான வெற்றிக்காக அடித்தளமிட்டு வழிகாட்டும் வழக்கறிஞர் சந்துருவாக நடிகர் சூர்யா நடித்து இருந்தார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் பல படைப்புகளை கொடுத்த பிரகாஷ்ராஜ், ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரி பெருமாள்சாமி கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்றாற் போல் நடித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். சில வருடங்கள் அரசியலில் கவனம் செலுத்திவந்த பிரகாஷ்ராஜ் தற்போது தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்திற்காக பிரகாஷ்ராஜ் 2.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் லிஜோமோள் ஜோஸ். இவர், ஜெய் பீம் படத்தில் தன் கணவனுக்காக நீதி கேட்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்ணாக செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது. ஜெய்பீம் படத்திற்காக லிஜோமோள் ஜோஸ் தோராயமாக 8 லட்சத்திற்குள் பெற்றுள்ளார்.

மணிகண்டன் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளைக் கொண்டவர். ஜெய்பீம் படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக, அநீதிக்கு எதிராக நிற்கும் துணிச்சலான, தைரியமான, அச்சமற்ற குணங்களைக் கொண்ட ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். இவர் 15 லட்சம் வரை ஜெய்பீம் படத்திற்கு சம்பளம் பெற்றுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான ராவ் ரமேஷ் ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞர் ராம்மோகன் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்திற்காக ராவ் ரமேஷ் 2 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

ரஜிஷா விஜயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றியவர். ஜெய்பீம் படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று மித்ராவாக நடித்திருந்தார். இவர் 5 லட்சம் வரை ஜெய்பீம் படத்திற்கு சம்பளமாக பெற்றுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்