fbpx
Connect with us

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.! புகைப்படம் உள்ளே.

News / செய்திகள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.! புகைப்படம் உள்ளே.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெடியாகும் சூர்யாவின் 36 படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ஜனவரி 1-ஆம் பட பூஜையுடன் துவங்கியது ஷூட்டிங். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

s-r-prabhu

சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிக்கவுள்ளனர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங். இசை யுவன் ஷங்கர் ராஜா.

சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகப் பிரம்மாண்டமான செட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை  மார்ச் 5-ஆம் தேதி செல்வராகவன் பிறந்தநாள் அன்று  வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து இருந்தனர். அந்த வகையில் தற்போது  படத்தின் தலைப்பு  மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ngk

செல்வா மற்றும் சூர்யா கூட்டணி முதல் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். படத்தை தீபாவளி விருந்தாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top