Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா 40யின் அசுரத்தனமான தலைப்பு வெளியானது.. பட கதை இது தானாம்
சூர்யா 40 – படத்தை இயக்குவது வெற்றிமாறன், தயாரிப்பது கலைப்புலி தாணு என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. என்னமாதிரி கதைக்களம், சூர்யா போன்ற நடிகருக்கு எவ்வாறு தீனி போடுவார் வெற்றி என பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர். இந்த நேரத்தில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் இப்படத்தின் டைட்டில் ‘வாடிவாசல்’ என கூறினார்.
ஜல்லிக்கட்டின் பொழுது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமே வாடிவாசல். (vadi vasal) காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்த பின் தான் காளைகள் இவ்வாசலைத் தாண்டும். மாடுபிடி வீரர்கள் வாடிவாசலைப் பார்த்தபடியே இருப்பர்.ஆக அசுரன் போலவே இந்தப்படமும் கிராமத்து பின்னணியில் இருக்கும்.
கடந்த 2017 இல் சி. சு. செல்லப்பா அவர்கள் எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக்கும் உரிமையை வெற்றிமாறன் வாங்கினார். எனவே இந்த 70 பக்கம் உடைய புக்கை தான் சூர்யா வைத்து படமாக்குகிறார் வெற்றி என்கின்றனர் கோலிவுட் பட்சிகள்.

vadi vasal
கதை – செல்லாயி அம்மன் கோயில்தான் கதைக்களம். அந்த ஜல்லிக்கட்டு வாசல்தான் மொத்த நாவலும். இரண்டு இளைஞர்கள் பிச்சி மற்றும் மருதன், உடன் ஜல்லிக்கட்டின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு வயதானக் கிழவர் மற்றும் ஜமீன்தார். அவர்களின் எண்ண ஓட்டங்கள், கொஞ்சம் பழைய நினைவுகள் என கச்சிதமான நாவல் தான் வாடிவாசல்.
ஆகமொத்தத்தில் ஆடுகளம் தொடர்ந்து மீண்டும் நம் மண்ணின் பாரம்பரியம் உள்ள விளயாட்டை கையில் எடுக்கிறார் வெற்றி. சூர்யாவுக்கு இப்படம் வாயிலாக தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அதிகாரபூர்வ அப்டேட்டுக்காக காத்திருக்கும் சினிமாபேட்டை டீம்.
