Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரம்மாண்ட தயாரிப்பாளர், கமர்ஷியல் இயக்குனர்- சூர்யா 40 அறிவிப்பு வெளியானது

சூர்யா NOC வாங்குவது படத்தை ப்ரொமோட் செய்வது என சூரரை போற்று ரிலீசுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார். நடிகர் என்பதனை விட நல்ல மனிதர் என பெயர் எடுத்து வருகிறார். இந்த படம் தான் OTT , அடுத்தடுத்த படங்கள் திரையரங்க ரிலீஸ் தான் எனவும் முன்பே அறிவித்தார்.

ஒருபுறம் ஹரியுடன் சிங்கம் 4 , மறுபுறம் வெற்றிமாறனுடன் வாடிவாசல், இதோடு சிறுத்தை சிவா படம் வேறு வைட்டிங் என அடுக்கிக்கொண்டே போகலாம் இவரின் சினிமா லைன் அப் பற்றி. நேற்று இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாயினது.

suriya-pandiraj-cinemapettai

suriya-pandiraj-cinemapettai

பாக்கியா இதழில் ஆஃபீஸ் பாயாக ஆரம்பித்து இன்று தங்கென்ன கோலிவுட்டில் ஒரு இடம் பிடித்துவிட்டார் பாண்டி ராஜ். மனிதரின் திட்டமிடல், பெரிய நட்சத்திர கூட்டத்தையே சமாளித்து படம் எடுப்பது இவரின் கூடுதல் பிளஸ்.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டு பிள்ளை முடித்தவர், தனது அடுத்த படத்தையும் இதே பானருக்கு செய்கிறார்.

surya 40

சூர்யா பாண்டி ராஜ் கெமிஸ்ட்ரி பசங்க 2 படத்திலேயே நாம் பார்த்தோம். பின்னர் சூர்யா – ஜோதிகாவின், 2 D நிறுவனத்துக்காக கார்த்தியை வைத்து கடை குட்டி சிங்கம் எடுத்தவர். அப்பொழுதே சூர்யா – பாண்டிராஜ் கூட்டணி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது அது நிகழ்ந்துள்ளது.

கோலிவுட் வட்டாரங்களில் நேர்மையான கூட்டணி என ஹீரோ மற்றும் இயக்குனரை சொல்லி வருகின்றனர்.

Continue Reading
To Top