Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெற்றிமாறன்- சூர்யா இணையும் படம் எந்த சமூகத்தை பற்றியது தெரியுமா? கோலிவுட் கிசு கிசு
யதார்த்தத்துக்கு அருகாமையில் படம் எடுப்பதில் வல்லவர் வெற்றிமாறன். கமெர்ஷியல் அம்சங்களை குறைத்து படம் எடுப்பதை தனது ஸ்டைலாக மாற்றிவிட்டார். ஏற்கனவே “லாக் அப்” என்ற நாவலை விசாரணை எனவும், “வெக்கை” என்ற நாவலை அசுரன் ஆகவும் மாற்றிய வித்தகர்.
இவர் அடுத்தடுத்து சூரி மற்றும் சூர்யாவை இயக்குகிறார். இதில் சூரி நடிக்கும் படம் நா. முத்துமாரின் படைப்பை தழுவிய படம். கலைப்புலி தாணு தயாரிப்பில் தான் சூர்யா படம் ரெடியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் மீரான் மைதீன் 2013 இல் எழுதிய “அஜ்னபி” என்ற புத்தகத்தின் தழுவல் என்கின்றனர் கோலிவுட் பட்சிகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர் தான் மீரான் மைதீன். மேடை நாடகக் கலைஞராகவும், பேச்சாளராகவும், திரைப்பட உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார் இவர்.

ajnabi by meeran mitheen
உரிய வயதில் கல்வி கற்க முடியாமல் குடும்பத்தைப் பிரிந்து பிழைப்பு தேடி செல்லும் இஸ்லாமியச் சமூகம் சார்ந்த, உணர்வுபூர்வமான பயணமே இந்த புத்தகம். மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், போராடுகிறார்கள் என்பதனை நம் கண்முன்னே கொண்டு வரும் இந்த புத்தகம்.
