“சூர்யா 37 படத்தின் டீம் இதுதான்” அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்.!

நடிகர் சூர்யா சிங்கம் -3 படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் தான் தானா சேர்ந்த கூட்டம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இதை தொடர்ந்து தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

NGK

NGK படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ராகுல் பரீத் சிங், என இரண்டு நடிகைகள் நடிகிரார்கள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இதன் படபிடிப்பு ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார், இது சூர்யாவின் கேரியரில் 37 வது படமாக அமைந்துள்ளது.

surya

அதேபோல் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன் ,மாற்றான் ஆகிய 2 படங்கள் நடித்து ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது, படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்துவருகிறது.

surya
surya

இந்த நிலையில் படத்தில் பணியாற்ற இருக்கும் டெக்னீஷியன் பட்டியலை கே.வி.ஆனந்த் அவரது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்படத்திற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார், கிரண் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

Comments

comments