Connect with us
boomerang-movie

லண்டனில் துவங்கிய சூர்யா 37 படபிடிப்பு.!

surya

News | செய்திகள்

லண்டனில் துவங்கிய சூர்யா 37 படபிடிப்பு.!

சூர்யா இல்லாமல் துவங்கிய சூர்யா37 படப்பிடிப்பு

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா37 படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

surya

surya

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோக்களின் லிஸ்டில் இருப்பவர் நடிகர் சூர்யா. அவரின் சமீபத்திய எல்லா படங்களுமே மாஸான கதாபாத்திரங்களாக அமைந்து விட்டது. தற்போது என்.ஜி.கே படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு நாயகிகள் சூர்யாவுடன் ஜோடி போட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் சில இணையத்தில் லீக்காகியது. அதை பார்க்கும் போது இப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. நாயகியாக சாயிஷா ஷைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தின் மற்றுமொரு பிரம்மாண்டமாக மலையாள சூப்பர் மோகன் லால், தெலுங்கு டான் அல்லு சிரிஷ், பாலிவுட் ஸ்டார் பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய வேடத்தை ஏற்று இருக்கிறார்கள். ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து, இப்படம் பயணம் பற்றிய கதையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதன் முதற்கட்டமாக, படப்பிடிப்பு லண்டனில் பூஜையுடன் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. என்.ஜி.கே படப்பிடிப்பில் சூர்யா இருப்பதால், மற்ற முக்கிய நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். சூர்யா விரைவில் லண்டன் கிளம்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது அதே போல் அவரும் படபிடிப்பில் கலந்துகொண்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top