Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா-37 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.! சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில்
நடிகர் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்பொழுது NGK படத்தின் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது அது மட்டும் இல்லாமல் NGK என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் இணைய இருக்கிறார், இவர்கள் இதற்க்கு முன் அயன்,மாற்றான் என்ற படத்தில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது,அதுமட்டும் இல்லாமல் படம் ஆக்க்ஷன் கலந்த திரில்லர் கதையை கொண்டது, படமானது 10 இடத்தில் எடுக்கபடவுள்ளது அமெரிக்க, டெல்லி , மும்பை, பிரேசில், லண்டன் என பல இடத்தில் எடுக்கிறார்கள் அதேபோல் படத்தை செப்டம்பர்க்குள் முடிக்க இருக்கிறார்களாம்.
