சூர்யா 37 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.?

நடிகர் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

surya
surya

மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் சாய் பல்லவியும் ஜோடியாக நடிக்கிறார், படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார் மேலும் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர் தான் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதில் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யார் ஹீரோயின் என்பது தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் இயக்குனர் ‘வனமகன்’ படத்தில் நடித்திருந்த சயிஷாவை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சாயிஷா இதற்கு முன் சூர்யா தம்பியான கார்த்திக் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments