சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

VJ பார்வதியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போட்டியாளர்கள்.. விறுவிறுப்புடன் செல்லும் சர்வைவர்!

சர்வைவர் நிகழ்ச்சியில் நடந்த விறுவிறுப்பான உரையாடல் உரையாடல் மூலம் பார்வதியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உள்ளனர் சர்வைவர் போட்டியாளர்கள். ஏனென்றால் சுட சுட நடந்த விவாதத்தில், அர்ஜூனின் கேள்விகள் ஒவ்வொன்றும் பார்வதி மீது அம்பு போல் பாய்ந்தது. பல இடங்களில் தொடர்ந்து சொதப்பிய பார்வதி, எபிசோடின் இறுதியில் பணிவாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

தன்னை எலிமினேட்க்கு தேர்வு செய்தீர்களா? என்று இதர போட்டியாளர்களுடன் தனித்தனியாக சென்று பார்வதி கேட்டறிந்தார். ஐஸ்வர்யாவும், நந்தாவும் தனக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று பார்வதிக்கு தெரியவந்தது. உண்மையை அறிந்த பார்வதி கொஞ்சம் உஷாராக இருந்து இருக்கலாம்.

ஆனால் தவளை தன் வாயால் கெடும் என்பதை நிரூபித்துவிட்டார். தனக்கு சாதகமாக இருந்தவர்களையும் தனக்கு எதிராக திருப்பி விட்டார் பார்வதி. எலிமினேஷன் குறித்த விவாதத்தை அர்ஜுன் முன் வைத்தார். அப்போது பார்வதி, ‘நான் தலைவராக இருந்தால் எனது குழுவிற்கு தேவையான இடைவெளி கொடுத்து, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்படும்படி செய்திருப்பேன்’ என்றும் ‘லீடர்ஷிப் சரியாக இல்லாததால் தான் அணி தோல்வி அடைந்தது’ என்றும் ‘இந்த இனிய டாஸ்கில் நான் வெளியில் நின்று கொள்கிறேன், வேறு போட்டியாளரை போட்டியிடும் படி கூறினேன்.

ஆனால், என் கருத்தை மறுத்து விட்டு வீம்புக்கென்றே என்னை சிக்க வைத்து விட்டனர்’ என்றும் தொடர்ந்து அணியினரை குற்றம்சாட்டியே வந்தார். இவருக்கு நிகராக இருந்த ரவிக்கு தற்போது பார்வதியின் இந்த வாய் துடுக்கான பேச்சு சாதகமாக அமைந்து விட்டது.

vj-parvathy-survivor
vj-parvathy-survivor

தற்போது பார்வதியை அணியினர் எலிமினேஷனுக்கு தேர்வு செய்துவிட்டனர். இறுதியில் பார்வதி எலிமினேட் செய்யப்பட்டார். பார்வதி தனது மனதில் இருக்கும் அனைத்து குமுறல்களையும் ஒரு வெள்ளைத்தாளில் கொட்டி தீர்த்துவிட்டார். ‘

ஆரம்பத்திலிருந்தே என்னை அணியினர்கள் அனைவரும் ஒதுக்கி வைத்தனர் என்றும் நான் கூறும் கருத்துக்களுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து கொண்டே இருந்தனர் என்றும் தனது குமுறல்களை அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் விடைபெறும் முன்பு ‘யார் மனதையாவது நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு சென்றார்.

- Advertisement -

Trending News