ஹீரோயிஸம் கட்டிய சர்வைவர் போட்டியாளர்.. தட்டிக் கொடுத்து வளர்த்து விடும் ஆக்ஷன் கிங்!

பொதுவாகவே ரியாலிட்டி ஷோக்கள் என்றால் மக்களை கவரும் வகையில் சற்று வித்தியாசமாக தான் எடுப்பார்கள். அதேபோன்று சர்வைவர் நிகழ்ச்சி மற்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு சற்று டஃப் கொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் விஜயதசமி திருநாளை முன்னிட்டு பல ஏலமும் நடைபெற்றது.

கடந்த எபிசோடில் ஸ்கார்லை தேடி லக்ஷ்மி அலைந்த போதுதான் தெரிந்தது, காடர்கள் அணி ஒரு பெட்டியின் மேல் அமர்வார்கள், அதற்கு அடியில் தான் இருக்கிறது என்று. இரவு லக்ஷ்மி அந்த  ஸ்கார்லை தேடி சுற்றிக் கொண்டிருக்கும் போது உமாபதிக்கு அவர்கள் மீது சற்று சந்தேகம் எழுந்தது. லக்ஷ்மியும் காலையில் கூட, எடுக்க முயன்றார்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனைப் பார்த்த விக்ராந்தும்  சந்தேகப்பட்டார்.

அதன்பிறகு லக்ஷ்மியே வந்து கூறிவிட்டார். அவர் படிக்கும்போது இந்தப் பெட்டிக்கு அடியில் இருப்பதாக படித்தார். அப்போது உமாபதி, அதை தோண்டி அந்தக் ஸ்கார்லை வெளியே எடுத்தார். வழக்கம்போல தோண்டி எடுத்த பிறகு, ‘இது எனக்குத்தான் சொந்தம்’ என்று உமாபதி கலாய்த்தார். ஆனால் அதன் பின்பு, அதை லக்ஷ்மியிடமே ஒப்படைத்தார். அப்போது உமாபதியின் ஹீரோயிஸம் அழகாக காட்டப்பட்டிருந்தது.

அதன்பிறகு, இவர்களுக்கிடையே டாஸ்க் நிகழ்ந்தது. பல மணிநேர தேடலின் பலனாக, உமாபதிக்கு சாவி கிடைத்தது. வேகமாகச் சென்று கயிறை வெட்டினார். அதேநேரத்தில் வேடர்கள் அணி மண்ணில் தேடியவாறு இருந்தார்கள். பின்னர் வேடர்கள் அணியும், மண்ணிலிருந்து அந்த கத்தியை எடுத்து விட்டார்கள்.

survivor-uma-cinemapettai
survivor-uma-cinemapettai

வேடர்கள் அணியில் இருந்த இனிகோ, அந்த கயிறை வெட்டினார். முதல் கயிறு வெட்டும்போது சற்று தடுமாறினாலும், இரண்டாவது கயிறு எவ்வாறு வெட்ட வேண்டும் என்று சுதாகரித்து வெற்றிகரமாக வெட்டினார். காடர்கள் அணி சாவியை எடுத்துக்கொண்டு ஒரு புதிரை முடிப்பதற்காக சென்றார்கள். அப்போது அவர்களுடைய டீம் மேட்களும்  அவர்களுக்கு பயங்கரமாக ஆதரவு அளித்தனர். அதனால், இவர்கள் சற்று வேகமாகவே முடித்துவிட்டார்கள்.

அது பார்ப்பதற்கே ஒரு ஹீரோயிக் ஆட்டிடியூட் ஆக இருந்தது. இதைக்கண்ட தொகுப்பாளர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு போட்டி என்றால் இவ்வாறுதான் ஆட்டிட்யூட் ஆக இருக்கவேண்டும் என்று கூறினார். அதன்பிறகு, உமாபதி எழுந்துபோய் அந்தக் கொடியை நட்டுவிட்டு ‘இது உனக்காக தான் விஜி’ என்று கத்தினார். ஆகையால், இந்த போட்டியில் காடர்கள் அணியே வெற்றி பெற்றது என்று அறிவித்தனர். இந்த போட்டிகள் எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்