சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிக்பாஸ் ஜுலியவே மிஞ்சும் சர்வைவர் போட்டியாளர்.. வாய்ச்சவடாலால் தெரியவரும் உண்மை முகம்.!

தற்போதெல்லாம் சேனல்களில் பலவிதமான ரியாலிட்டி ஷோக்களை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், விஜயலக்ஷ்மி, சிருஷ்டி டாங்கே, விஜே பார்வதி, பெசன்ட் ரவி ஐஸ்வர்யா போன்ற 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நூறு நாட்களுக்கு, இவர்களுக்கு தரப்பட கூடிய அனைத்து டாஸ்க்குகளிலும் சிறப்பாக விளையாடி சிறந்த போராளி (Survivor) என்று வெற்றி பெறுபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் தங்களால் வாழ முடியும். சர்வைவர் (Survival) பண்ண முடியும் என்பதை நிரூபிக்க வேண்டுமாம். தற்போது போட்டியாளர்களை இரு அணியாகப் பிரித்து அடுத்த டாஸ்க் வழங்கியுள்ளனர். அதில் உணவு மற்றும் நெருப்பு போன்ற அத்தியாவசிய தேவைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த டாஸ்க்கினால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் உணவு எடுத்து வந்த பார்வதி எதிர்பாராதவிதமாக ஸ்லிப்பாகி தரையில் விழுந்து விட்டார். இதைப்பார்த்த சிருஷ்டி டாங்கே எதர்ச்சியாக சிரித்துவிட்டார். அதற்கு விஜே பார்வதி, ‘நான் கீழே விழுவதைக் கண்டு நீ எப்படி சிரிக்கலாம், நான் விழுவதை பார்த்தால் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா? என்றும் வாய்சவடாளாக பேசியுள்ளார்.

survior-cinemapettai
survior-cinemapettai

இவரால் அந்த அணி மீது இருந்த மதிப்பு குறைந்து விட்டதாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதுமட்டுமன்றி சிருஷ்டி இடம் ‘கேமரா வரும்போது மட்டும் வேலை செய்கிற மாதிரி நடிக்கிறியா? என்று வெட்டி வம்பு இழுத்தும், மரம் வெட்டிக் கொண்டிருக்கும் சீனில் அம்ஜத் கானுடன் தகராறு செய்தது’ போன்ற சிறுசிறு சர்ச்சைகளை விஜே பார்வதி ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜல்லிக்கட்டு ஜூலியை போலவே இவருக்கும் தாறுமாறாக வாய் நீண்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஜூலி என்றால் சர்வைவர் நிகழ்ச்சிக்கு விஜே பார்வதி என்ற பெயரை பெற்று விட்டார் என்று சொல்லலாம்.

- Advertisement -

Trending News