வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மழையிலும் பனியிலும் அசால்ட் காட்டும் சர்வைவர்.. கடுமையாக போட்டியிடும் வேடர்களும், காடர்களும்

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்வைவர் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் பங்கெடுப்பு மிக அருமையாக இருந்தது. போட்டியாளர் நந்தா கையில் அடிபட்டதால் சிகிச்சை எடுக்கும் பொழுது வலியின் உச்சத்தில் கத்தியது அவர்களின் உடலுழைப்பை சுட்டிக்காட்டுகிறது. பின் கடுமையான தொடர் மழையில் மாட்டிக் கொண்டு பனியில் வாடும் அவர்களை காணும் போது நமக்கே நடுங்குகிறது.

இவர்களின் அன்பானவர்களிடம் இருந்து பரிசு என்னும் டாஸ்க் பற்றிய ஸ்குரோல் இரண்டு தீவுகளுக்கும் அனுப்பப்பட்டது. சர்வைவர் மற்ற ஷோக்களை போல பரிசை அவ்வளவு சுலபமாக அள்ளித் தர மாட்டாங்க. அந்த விதமாக இதில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் டாஸ்க் கொடுத்து பின் பரிசை வழங்கி சிறப்பித்தனர். இதில் வேடர்கள் முதலில் டாஸ்கை செய்து பரிசைப் பெற்றனர்.

முதலில் தேங்காய் உரிக்கும் டாஸ்க், உடனே போட்டியாளர்கள் அனைவரும் இனிகோவை பார்க்க அவர் இப்படி ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம்’ ஆகிட்டீங்க என்று புலம்பிக்கொண்டே கை வலியுடன் டாஸ்கை முடித்து ஒரு பரிசை பெற்றார். அதில் அவரின் அண்ணன் பசங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது.

நந்தா ஒரு ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை வைத்து அவரின் டாஸ்க் அமைந்திருந்தது. அவர்களுடைய தீவை அழகாக வரைந்து அந்த பரிசைப் பெற்றார். அதில் அவரின் குழந்தையின் புகைப்படம் இருந்தது அதை கண்டு உணர்ச்சி பொங்க கண்கலங்கினார் நந்தா.

அதனைத் தொடர்ந்து சரண் உடைய டாஸ்கில் குழிக்குள் தலையை தவிர முழு உடலும் சிறிது நேரம் புதைக்கப்பட்டது. இதில் சரணுக்கு கிடைத்த பரிசு அவர் தந்தையிடம் இருந்து வந்த கடிதம் மற்றும் ஆடைகள். பின்னர் ஐஸ்வர்யா மணல் கோபுரம் கட்டும் டாஸ்கில் அழகாக அதனை வடிவமைத்து வெற்றி பெற்றார். அவருக்கு கிடைத்த அழகான பரிசு அவரின் குடும்பத்தாரின் புகைப்படம்.

survivor-cinemapettai8
survivor-cinemapettai8

இதனைத் தொடர்ந்து நாராயணனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் மிகவும் கடுமையாக இருந்தது. கடலுக்குள் நீச்சல் அடித்து சென்று அவரது பரிசை எடுத்து வர வேண்டும் என்பது. அவரின் இந்த கடின உழைப்புக்கு இனிமையான பரிசு, நல்ல உணவுப் பண்டங்களும், அவரின் குடும்ப புகைப்படமும் வழங்கப்பட்டது. உணவை அவர் அனைவருடனும் பகிர்ந்தார்.

இதேபோல டாஸ்க்குகள் காடர்கள் தீவுக்கும் வழங்கப்பட்டு அவர்களும் சிறப்பாக விளையாடி தங்கள் பரிசுகளை பெற்று இன்றைய எபிசோடு முழுவதும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

- Advertisement -

Trending News