Tamil Nadu | தமிழ் நாடு
விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ ஆணையம்! துரிதமாக செயல்பட்ட முதல்வர்!
தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவரது நலத் திட்டங்களால் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது. ஏனெனில் தமிழகத்தில் மகசூலை பெருக்குவது, முதலீடுகளை ஈர்ப்பது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, நீர் மேலாண்மையை சிறப்பிப்பது என பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தைப் பட்டை தீட்டியுள்ளார் எடப்பாடியார்.
ஏற்கனவே கூட்டணி கட்சியினர் வைத்த இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அதிரடியான முடிவு ஒன்றை எடப்பாடியார் கொடுத்தார்.
அதாவது சாதிவாரியான தற்போதைய நிலவர புள்ளி விபரங்களை சேகரிக்கும் விதிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் சாதிவாரி அறிக்கையை சமர்ப்பிக்க புதிதாக ஆணையம் ஒன்றை அமைக்க எடப்பாடியார் உத்தரவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கிடைத்தன.
மேலும், ஏற்கனவே எடப்பாடியார் இந்தக் கணக்கெடுப்பை கொண்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கை எதிர்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் பல்வேறு கட்சிகளின் கோரிக்கைக்கு பதில் அளிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் எடப்பாடியார் தற்போது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்திற்கு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான குலசேகரனை தலைமை வகிக்க உத்தரவிட்டுள்ளாராம்.
மேலும், சாதிவாரியான புள்ளி விபரங்களை திரட்டி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க குலசேகரன் தலைமையிலான ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டிற்கு வரும் என்றும், விரைவில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடியார்.
எனவே, தற்போது துரிதமான நடவடிக்கைகளை எடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தை தொடங்கியுள்ள எடப்பாடியாருக்கு, பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

edappadi-palaniswami
