நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள்: சூர்யாவின் சர்ச்சை பேச்சு! - Cinemapettai
Connect with us

Cinemapettai

நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள்: சூர்யாவின் சர்ச்சை பேச்சு!

News | செய்திகள்

நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள்: சூர்யாவின் சர்ச்சை பேச்சு!

கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள வேறு சில நடிகைகளும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக புவனேஷ்வரி வாக்குமூலம் கொடுத்ததாக பத்திரிகைகள் அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் செய்து வெளியிட்டது.

இதனால் கொதித்துப்போன திரையுலகம் பத்திரிகையாளர்களை வாய்க்குவந்தவாறு திட்டி தீர்த்தது. இதனால் நடிகர்கள் சூர்யா, விஜயகுமார், சத்தியராஜ், அருண் விஜய், சரத்குமார், விவேக், சேரன், ஸ்ரீபிரிய உள்ளிட்ட 8 பேர் மீது பத்திரிகையாளர்கள் வாழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகததால் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கும் நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த வழக்கிற்கு காரணமான நடிகர்களின் அந்த பேச்சுக்கள் பின்வருமாறு:-

ஸ்ரீபிரியா: யாரோ ஒரு கேடு கெட்ட நல்ல தாய், தந்தையருக்கு பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் நல்ல அக்கா, தங்கச்சிகளுடன் பிறக்கவில்லையா?

விஜயகுமார்: நேரே அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து நாலு பேரையாவது வெட்றதுன்னு தான் முடிவு பண்ணினேன்.

சத்தியராஜ்: ஸ்ரீபிரியா பேசியதை எல்லோரும் வழி மொழிய வேண்டும். அவன் என்னத்த புடுங்குவான் என பார்ப்போம். உள்காயம் தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களை அடிக்க வேண்டும்.

சூர்யா: நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள் தான் இந்த பத்திரிக்கையாளர்கள். அவர்களெல்லாம் ஈனப்பசங்க.

அருண் விஜய்: பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவங்க காலில் விழ வைப்பேன்.

சரத்குமார்: என்னை பற்றி எழுதிய போது 200 பேருடன் சென்று அந்த அலுவலகத்தை அட்டாக் பண்ணினேன்.

சேரன்: ராஸ்கல்ஸ்..உன் வீட்டு பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி,” என்றார்.

விவேக்: எழுதிய நிருபர் பெயரை எழுத தைரியமில்லாதவர்கள். எழுதியவன் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அவர் ஒரு அப்பன், ஆத்தாவுக்கு பிறந்தவன் என்றால் மேடையேறி ஆதாரம் காட்டட்டும், ஒரு குவார்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுகிறவர்கள் தானே இவர்கள். மானமுள்ளவர்கள் என்றால் சினிமா பற்றி எழுதாமல் பத்திரிகை நடத்தட்டுமே.

இவர்கள் இப்படி பேசியதால், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். அந்த வழக்கில் தான் தற்போது இவர்கள் ஆஜராகவில்லை என நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top