fbpx
Connect with us

அடுத்தடுத்து வெற்றி இயக்குனர்களுடன் களம் இறங்கும் சூர்யா.. இந்த வருடம் ஜெயிப்பாரா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்தடுத்து வெற்றி இயக்குனர்களுடன் களம் இறங்கும் சூர்யா.. இந்த வருடம் ஜெயிப்பாரா?

கடந்த வருடம் சூர்யாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் ஓடவில்லை. என்.ஜி.கே மற்றும் காப்பான் திரைப்படங்கள் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பைப் பெற்றது.

சூர்யா தனது படத்திற்காக அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார். கஜினி, பிதாமகன்,நந்தா போன்ற படங்கள் இதற்கு சான்றாகும். மீண்டும் ஒரு உதரணமாக தற்போது நடிகர் விஷ்ணு விஷால் சூர்யாவை புகழ்ந்து இருப்பர், தான் சிக்ஸ் pack வைத்து இருபதற்கும் சூர்யா மற்றும் கௌதம் வாசுதேவ் மெனேன் காரணம் என்று கூறியுள்ளார்.

v-vishal

v-vishal

சூர்யா இந்த வருடம் அடுத்தடுத்து தரமான இயக்குனர்களை கையில் எடுத்துள்ளார் என்றே கூறலாம். இவர் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று, சுதா கொங்கரா இயக்கத்தில் ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

suriya-banner

suriya-banner

இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது கோலிவுட்டை மிரட்டியது என்றே சொல்லலாம். இதற்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தை கையில் எடுக்க உள்ளாராம்.

vadivasal

vadivasal

இந்தப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ஒரு நாவலை தழுவிய கதைக்களமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து வெற்றி இயக்குனர்களை வைத்து களமிறங்கும் சூர்யா வெற்றிப்படங்களை தருவார் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top