Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு கல்யாணம் ஆயிருச்சு.. ரம்யா பாண்டியனிடம் ஜொள்ளு விடும் பிக்பாஸ் கன்டஸ்டன்ட்ஸ்!
தமிழ் மக்களுக்கு சமுத்திரக்கனியுடன் ‘ஆண் தேவதை’ படத்தின் மூலம் பரிச்சயமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
அதன்பின் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் கவர்ச்சி புயலாக மாறிய ரம்யா பாண்டியனுக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் கிடைத்தது.
அதன் பின் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆன ரம்யா பாண்டியனை, பிக்பாஸ் வீட்டின் நுழைவாயில் இருந்து வரவேற்ற சக போட்டியாளரும் ஆரி “எனக்கு கல்யாணம் ஆயிருச்சு!” என்று பட்டுனு சொல்லி ரம்யாவை ஷாக் ஆகி உள்ளார்.
ஏன் இப்படி சொல்றீங்க? என ரம்யா கேட்டதும் ‘உங்களுடைய ரசிகர்கள் தான் என்னை அப்படி உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்’ என்று கூறி ரம்யாவின் ஷாக்கை ரிலீஸ் செய்தார்.
அவரைத் தொடர்ந்து வேல்முருகனும் “எனக்கு ஒரே ஒரு தடவைதான் கல்யாண ஆயிருக்கு” என்று கூறி ரம்யாவை கலாய்க்க தொடங்கி விட்டனர்.

ramya-pandiyan-cinemapettai-2
ஏண்டா என் செல்லத்தை இப்படி கலாய்க்கிறீங்க! என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரம்யாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
