புது மருமகனை வைத்து அர்ஜுன் எடுக்கும் பார்ட் 2.. சூப்பர் ஹிட் படத்துக்கு ஆக்சன் கிங்கின் விபரீத ஆசை

அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் சமீபத்தில் சம்பந்தி ஆனார்கள். இவர்கள் வாரிசுகளுக்கு தடபுடலாக திருமணம் செய்து அசத்தினார்கள். இது ஒரு காதல் கல்யாணம். கெருகம்பாக்கத்தில் உள்ள அனுமன் கோவிலில் இவர்களது கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா மற்றும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்தார்கள். ஜீ தொலைக்காட்சிக்கு அர்ஜுன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சர்வைவர். இது ஒரு ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் உமாபதி ராமையா.

இவர்கள் இருவருக்கும் அப்பொழுதே நல்ல பழக்கம் ஏற்பட்டது. அது மட்டும் இன்றி உமாபதி அர்ஜுன் போல் பாடி பிட்னெஸ் கடைபிடிக்கும் நபராம். நான்கு படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியிலும் நன்றாக விளையாடினார். இதனால் அர்ஜுனுக்கு மிகவும் நெருங்கிய நபராக மாறினார்.

சூப்பர் ஹிட் படத்துக்கு ஆக்சன் கிங்கின் விபரீத ஆசை

ஏற்கனவே மருமகன் உமாபதிக்கு நடிப்பும் வரும் என்பதால் இப்பொழுது அர்ஜுன் அவரை வைத்து இரண்டாம் பாகம் படம் ஒன்றை எடுக்கப் போகிறாராம். அர்ஜுன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஏழுமலை. இந்த படம் அப்பொழுது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்சமயம் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

அர்ஜுனின் மருமகன் உமாபதி, ஆதாங்கப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி போன்ற நான்கு படங்களில் நடித்துள்ளார் இதனால் அவரை வைத்து ஏழுமலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறாராம் ஆக்சன் கிங். இதற்கு மகள் ஐஸ்வர்யா கொடுத்த அழுத்தம் தான் முக்கிய காரணமாம்.

Next Story

- Advertisement -