செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிறந்தநாளுக்கு செம ட்ரீட் கொடுக்க போகும் ரஜினி.. டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் சம்பவம் இருக்கு

வயதானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையவே இல்ல என படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொல்லுவது போல். 70 வயதுக்கு பிறகு தான் ரஜினி படங்களை வாரி குவித்து நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து இளம் இயக்குனர்கள் லைன் அப்பில் படம் பண்ணப் போகிறார்

ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். முதல் பாகம் 650 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது. இதனால் சன் பிக்சர்ஸ் இந்த பட குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பல விலை உயர்ந்த பொருட்களை கொடுத்து அசத்தியிருந்தார்கள் .

இப்பொழுது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் முழு ஸ்கிரிப்டையும் நெல்சன் ரெடி பண்ணிவிட்டார். இந்த படத்திற்கான ஒரு ப்ரோமோ சூட்டிங் நடைபெறவிருக்கிறது. தற்சமயம் இங்கே வானிலை அறிக்கை சரி இல்லாத காரணத்தால் ரஜினி இதற்கு இடைவெளி கொடுத்து இருக்கிறார்.

மார்ச் மாதம் தான் ஜெயிலர் படத்தில் இரண்டாம் பாகம் சூட்டிங் ஆரம்பிக்கவிருக்கிறது. ஆனால் இப்பொழுது டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் வருவதால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கு ஒரு ப்ரோமோ வெளியிடுகிறார்கள் . அந்த வேலையில் தான் நெல்சன் பிசியாக இருக்கிறார்.

மழைக் குறுக்கிடுவதால் இன்று நடைபெற வேண்டிய ப்ரோமோ சூட்டிங் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளுக்கு மாற்றிவிட்டார் ரஜினிகாந்த். இருக்கும் ஒரு வார இடைவெளியில் முழுவதையும் முடித்து பிறந்தநாள் அன்று ஜெயிலர் 2 படத்திற்கான ப்ரோமோ காட்சிகளை வெளியிடுகிறார்கள்.

- Advertisement -

Trending News