Connect with us
Cinemapettai

Cinemapettai

neelima

Tamil Cinema News | சினிமா செய்திகள்

13-வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டாம்.. நீலிமா வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!

சின்னத்திரை நடிகையாக மக்களின் மனதைக் கவர்ந்தவர்தான் நடிகை நீலிமா ராணி. இவர் உலகநாயகன் கமலஹாசனின் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.அதுமட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நாயகியாகவும்,

எதிர்மறை வேடங்களிலும்,  குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா.குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. அதேபோல் விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சக்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நீலிமா நடித்துள்ளார்.

பொதுவாக வெள்ளித் திரை நாயகிகளில் தொடங்கி சின்னத்திரை நாயகிகள் வரை தவறாமல் செய்யும் ஒரே விஷயம் என்றால், அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான். அந்தவகையில் நீலிமா தன்னுடைய குடும்ப புகைப்படத்துடன் சர்ப்ரைஸ் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீலிமா ராணி தன்னைவிட 12 வயது மூத்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவருக்கு 9 வருடம் கழித்து ஒரு மகள் பிறந்தது. இவர்கள் சமீபத்தில் தங்களது பதிமூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய போது,

neelima-cinemapetai1

neelima-cinemapetai

குடும்பமாக எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தங்கள் வீட்டிற்கு வரும் ஜனவரி 2022ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை வரப்போகின்ற செய்தியையும் தெரிவித்துள்ளார். ஆகையால் நீலிமா கர்ப்பமாக இருப்பதற்கு சமூக வலைதளங்களிலும் வாயிலாக திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top