2015ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி. படத்தின் இரண்டாம் பாகம் பற்றி சில பல நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ‘மாரி2 அப்டேட்’ என்று ஹாஷ்டாக் இட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங்கும் ஆகியது.

முறுக்கு மீசை, குளிங் க்ளாஸ், ஜிகு ஜிகு சட்டை, தங்கச் சங்கிலி, யமஹா பைக், வாயில் எந்நேரமும் சிகரெட், தினமும் குடி, எந்நேரமும் இரண்டு அடிப்பொடிகள், புரா ரேஸ், பஞ்ச் டயலாக் என்று திரையில் மாரியாக வளம் வந்தார் தனுஷ். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படம்  ஹிட்  கிடையாது; சுமார் ரகம் தான். இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பு வந்த பொழுது, சற்று ஷாக் ஆக தான் இருந்தது.

மெகா கூட்டணி

வன்டர் பார் நிறுவனம் தயாரிப்பில் தான் மாரி 2 வும் ரெடியாகிறது. தனுஷ் தான் ஹீரோ என்பது சொல்லித்தெரிய தேவையில்லை. இதில் வில்லனாக மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பதும், கதாநாயகியாக ப்ரேமம்  புகழ் சாய் பல்லவி நடிப்பதும் முன்பே வெளியான தகவல்.

செகன்ட் ஹீரோவாக கிரிஷ்ணா

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகம் ஆனவர். கடைசியாக பண்டிகை படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வந்தவர். அப்பா சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்; அண்ணனோ முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தன். சினிமா பின்புலத்தில் இருந்து வந்தாலும், கிருஷ்ணா இன்றும் ஒரு வளர்ந்து வரும் நடிகர் என்று தான் நாம் கருத வேண்டியுள்ளது. அலிபாபா, கழுகு, யாமிருக்க பயமேன் என்று மிக குறைவான ஹிட் படங்கள் தான் கொடுத்துள்ளார்.

இவர் படத்தின் இரண்டாம் கதாநாயகானாக நடிக்க கமிட் ஆகி இருப்பது தான் புது நியூஸ். இவர் நடிப்பதை பாலாஜி மோகன் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் “மாரி 2 படக்குழு, உங்களை வரவேற்கிறது ப்ரோ.” என்று டீவீட்டினார்.

இதற்கு கிரிஷ்ணாவும்மாரி 2 படத்தில் நடிப்பது மகிழிச்சியாக உள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன், மற்றும் தனுஷின் டீமில் இணைவதில் ஆர்வமாக உள்ளேன்என்று பதில் ட்வீட் தட்டிவிட்டார்.

மில்லியன் டாலர் கேள்வி?

மாரி முதல் பாகம் ஹிட் அடிக்க பாதி காரணம் தனுஷ் என்றால், மீதி காரணம் இசைமைப்பாளர் அனிருத்தின் பாடலும், பாக்-க்ரௌண்ட் மியூசிக் தான். எனோ தனுஷ் தற்போழுது அனிருத்தை ஒதுக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஸீன் ரோல்டன் அவர்களை தான், தன் கடைசி படங்களான பவர் பாண்டி, மற்றும் வி ஐ பி 2 வில் பயன்படுத்தினார். இவ்விரண்டில் ப. பாண்டி இசை ஹிட் என்றாலும், கம்மற்சியல் படமான வி ஐ பி 2  சற்று சொதப்பல் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்திற்கு யாரை இசைமைப்பாளாராக இந்த டீம் முடிவு செய்யும் என்பது தான் புரியாத புதிராக உள்ளது. அடுத்த அப்டேட் வரும் வரை காத்திருப்போம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here