India | இந்தியா
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் பரிசு.. எவ்வளவு தெரியுமா?
சுர்ஜித் கடந்த 4 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அவரின் இழப்பு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் 100 அடியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கூட ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லை என்பது தான்.
இதற்காக அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் சுர்ஜித் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர். 37 அடி இருக்கும்போதே சுர்ஜித்தை காப்பாற்றியிருக்கலாம்.
பெற்றோர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து வர வேண்டும். சுர்ஜித்தின் இறப்பு பெற்றோர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு பாடம் என்றே கூறலாம்.
தற்போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு இயந்திரம் கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். இதற்காக பரிசுத் தொகை 5 லட்சம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
