Connect with us

Cinemapettai

வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் இணைந்த அசுரத்தனமான இசையமைப்பாளர்.. கூடும் வெறித்தனம்

surya-40

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் இணைந்த அசுரத்தனமான இசையமைப்பாளர்.. கூடும் வெறித்தனம்

தற்போது தமிழ் சினிமா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் சூர்யா40 திரைப்படம் தான். ஒரு பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கும் சூர்யாவுக்கு இந்த கூட்டணி அமைந்தது அவரது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என் ஜி கே மற்றும் காப்பான் ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பது பிரபல திரையரங்குகளில் வெளியிட்ட செய்திகளில் இருந்தே தெரிந்தது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு சூர்யா ரசிகர்கள் ஆளானார்கள்.

இருந்தும் சூரரைப்போற்று திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருட தீபாவளிக்கு சூர்யா40 திரைப்படம் வெளியாக இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்திற்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அசுரன் படத்தில் மிரட்டி இருந்த ஜி.வி. பிரகாஷ், சூரரைப்போற்று திரைப்படத்தின் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் இணைவதால் அசுரனை விட இசை செம்மையாக இருக்கும் என அவரது ரசிகர்கள் இப்பொழுதே கனவு காணத் தொடங்கி விட்டனர்.

மேலும் இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஜி.வி. பிரகாஷுக்கு 75 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top