நஷ்டப்பட்ட படத்துக்காக சூர்யா செய்த தியாகம்.. கங்குவா படத்தில் வாங்கிய சம்பளத்தின் உள் ரகசியம்

Surya: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. 10 மொழிகளில் உருவாகி 3டி அனிமேஷன் உடன் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாக உருவாகி புராண காலத்து கதை முதல் தற்கால கதை வரை அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு பேண்டஸி படமாக இருக்கப் போகிறது.

இப்படத்தை ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் மற்றும் வம்சி கிருஷ்ணா ரெட்டி ஆகியோர்கள் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இதில் திஷா பதானி, பாபி தியோல், கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

யாரும் செய்யாததை செய்து காட்டிய சூர்யா

மேலும் இப்படத்தில் சூர்யா கிட்டத்தட்ட ஆறு கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் இதற்காக இவர் வெறும் 28 கோடியை தான் சம்பளமாக வாங்கி இருக்கிறார். ஆனால் தனுஷ், சிவகார்த்திகேயன் சிம்பு இவர்கள் அனைவரும் இப்போது 40 கோடி சம்பளம் வாங்கி வரும் வேளையில் சூர்யா மட்டும் ஏன் இவ்வளவு கம்மியாக சம்பளத்தை வாங்கி இருக்கிறார் என்று பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால் அதற்கான உள் ரகசியம் என்னவென்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது சூர்யா நடிப்பில் வெளிவந்த 24 படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனர் தான் தயாரித்திருக்கிறார். அதனால் அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காகத்தான். இப்பொழுது கங்குவா படத்தில் சூர்யா கம்மியான சம்பளம் எனக்கு போதும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார்.

ஆனால் இதே மாதிரி எத்தனையோ முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போடும் அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால் அவர்கள் யாரும் இந்த மாதிரி ஒரு செயலை யோசித்தது கூட கிடையாது. ஆனால் சூர்யா தயாரிப்பாளர்களின் நிலைமையை புரிந்து அவர்களுக்காக இப்படி ஒரு முடிவை எடுத்தது பாராட்டக்கூடியதுதான்.

இதே மாதிரி சூர்யா நடித்த சில படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படி என்றால் அதே தயாரிப்பாளுடன் மறுபடியும் இணைந்து நடித்தால் அவர்களிடமும் இதே மாதிரி குறைவான சம்பளத்தை வாங்குவாரா என்ற கேள்வியும் எழும்பி வருகிறது. எது எப்படியோ அவரால் நஷ்டப்பட்ட பட ஒரு படத்திற்கு தியாகம் பண்ண மாதிரி சூர்யாவின் சம்பளத்தை குறைத்திருக்கிறார்.

- Advertisement -