Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோடிகளை குவிக்கும் சூர்யாவின் காப்பான்.. 3 நாட்களில் எவ்வளோ வசூல் தெரியுமா
சூர்யாவின் “காப்பான்” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்திய சூர்யாவின் திரைப்படங்களில் “காப்பான்” திரைப்படம் அதிகமாக வசூல் செய்து வருகிறது.
படம் வெளியான முதல் நாளில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. இருந்தும் இரண்டாவது, மூன்றாவது நாட்களில் தமிழகத்தில் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக அட்டகாசம் செய்து வருகிறது.
இன்னும் சொல்லப்போனால், எக்ஸ்ட்ரா சேர் போட்டு டிக்கெட் விற்று வருகின்றனர், திரையரங்கு உரிமையாளர்கள்.படம் வெளியான முதல் மூன்று நாட்களில் சுமார் 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அசத்தியுள்ளது.
சமீபகாலமாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த சூர்யாவுக்கு, காப்பான் திரைப்படம் நல்ல கம்பேக் கொடுத்துள்ளது.இப்படம் தமிழகத்தில் 40 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தாலே ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிடும்.
சூர்யாவையும் காப்பாற்றி விட்டது இந்த “காப்பான்”.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
