23 வருட சினிமாவில் சூர்யாவுடன் முதன் முறையாக இணையும் பிரபலமான இசையமைப்பாளர்.. தெறிக்கும் அப்டேட்!

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 23 வருடங்கள் கடந்த சூர்யாவுக்கு தற்போதுதான் முதல் முறையாக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் மறுமலர்ச்சி ஏற்பட்டு அடுத்தடுத்த படங்களில் இயக்குனர்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் மினிமம் கேரன்டி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறியப்படும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தன்னுடைய நாற்பதாவது படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் பட நடிகை பிரியங்கா அருள்மோகன் என்பவர் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் முதல்முறையாக சூர்யா படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். சமீப காலமாக பாண்டிராஜ் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் இமான் சூர்யா 40 படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

suriya40-cinemapettai
suriya40-cinemapettai

இவர் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இதற்கு முன்னர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்கும் டி இமான் தான் இசையமைப்பாளர்.

சன் பிக்சர்ஸ் இமானை குத்தகைக்கு எடுத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களில் கமிட் செய்யப்பட்ட வருகிறார். முதல்முறையாக சூர்யா படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

ஏற்கனவே ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த அருவா படத்திற்கு முதலில் இமான் தான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்